Uma Sundaram

Sunday, April 22, 2007

Soundaryalahiri Script with Meaning Shlokas 91 - 100

पदन्यास-क्रीडा परिचय-मिवारब्धु-मनस:
स्खलन्तस्ते खेलं भवनकलहंसा न जहति /
अतस्तेषां शिक्षां सुभगमणि-मञ्जीर-रणित-
च्छलादाचक्षाणं चरणकमलं चारुचरिते // [९१]

(चारुचरिते) புண்ணிய சரித்திரம் உடையவளே ! (ते) உன்னிடைய (भवनकलहंसा) வீட்டில் இண்ண அன்னப் பறவைகள் (पदन्यासक्रीडा) உன்னுடைய நடை அழகை (परिचयम्) கற்றுக்கொள்ள (आरब्धु-मनस: इव) ஆரம்பிக்க எண்ணம் கொண்டவைபோல் (स्खलन्त:) துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண்டு (ते) உன்னுடைய (खेलं) அழகிய நடையை (न जहति) தொடர்வதை விடுவதில்லை. (अत:) ஆகையினால் (चरणकमलं) உன்னுடைய திருவடி (सुभग) மங்களகரமான (मणि-मञ्जीर) ரத்தினம் இழைத்த சிலம்புகளில் (रणित) ஒலியின் மூலம் (च्छलाद्) மறைமுகமாக (तेषाम्) அப்பறவைகளுக்கு (शिक्षाम्) நடைப்பழகத்தை (आचक्षाणं इव) கற்றுக்கொடுபதுபோல் (भवति) இறுக்கிறது.

गतास्ते मञ्चत्वं द्रुहिण हरि रुद्रेश्वर भृत:
शिव: स्वच्छ-च्छाया-घटित-कपट-प्रच्छदपट: /
त्वदीयानां भासां प्रतिफलन रागारुणतया
शरीरी शृङ्गारो रस इव दृशां दोग्धि कुतुकम् // [९२]

(द्रुहिण) ப்ரம்மா (हरि) விஷ்ணு (रुद्र:) ருத்திரன் (ईश्वर:) ஈசுவரன் ஆகிய (भृत:) அதிகார புருஷர்கள் (ते) உன்னுடைய (मञ्चत्वं) வேதஸ்வரூபமாகிய கட்டிலின் நான்கு கால்களாக இருக்கும் தன்மையை (गता) அடைந்திருக்கிறார்கள் (शिव:) ஸதாசிவன் (स्वच्छ-च्छाया) வெண்மையான காந்தியோடு கூடிய (घटित-कपट-प्रच्छदपट:) மேல்விரிப்பு என்ற வேஷத்துடன் இருக்கிறார். (त्वदीयानां) உன்னுடைய (भासां) காந்தியின் (प्रतिफलन रागारुणतया) பிரதி பலனத்தினால் அவர் சிவப்பாகத் தோன்றுவதால் (शृङ्गारो रस) சிருங்கார ரஸமே (शरीरी इव) சரீரம் படைத்து வந்தது போல் (दृशां) உன்னுடைய கண்களுக்கு (कुतुकम्) ஆனந்தத்தை (दोग्धि) அளிப்பவர் ஆகிறார்.

अराला केशेषु प्रकृति सरला मन्दहसिते
शिरीषाभा चित्ते दृषदुपलशोभा कुचतटे /
भृशं तन्वी मध्ये पृथु-रुरसिजारोह विषये
जगत्त्रतुं शंभो-र्जयति करुणा काचिदरुणा // [९३]

(शंभो) பரமசிவனுடைய (काचिद्) மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத ஏதோ ஒரு (करुणा) கருணையானது (जगद्) உலகை (त्रातुम्) ரக்ஷிப்பதற்க்காக (अरुणा) அருணா என்கிற பராசக்தி வடிவில் (विजयते) வெற்றியுடன் விளங்குகிறது. அந்த கருணாசக்தி - (केशेषु) தேவியின் கூந்தலில் (अराला) சுருளும் குடிலத் தன்மையாகவும் (मन्दहसिते) புன்சிரிப்பில் (प्रकृति सरला) இயற்க்கையான இனிமையாகவும் (चित्ते) மனத்தில் (शिरीषाभा) வாகைப் பூவினதுபோன்ற மிருதுத்தன்மையாகவும் (कुचतटे) நகில்களில் (दृषदुपलशोभा) கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினது போன்ற கடினமாகவும் (मध्ये) இடையில் (भृशं तन्वी) மிகுந்த மெலிவாகவும் (उरसिज) மார்பிலும் (आरोह विषये) நிதம்பத்திலும் (पृथु) பருமனாகவும் (जयति) விளங்குகிறது.

कलङ्क: कस्तूरी रजनिकर बिम्बं जलमयं
कलाभि: कर्पूरै-र्मरकतकरण्डं निबिडितम् /
अतस्त्वद्भोगेन प्रतिदिनमिदं रिक्तकुहरं
विधि-र्भूयो भूयो निबिडयति नूनं तव कृते // [९४]

(इदं) இந்த (रजनिकर बिम्बं) வானில் சந்திரமண்டலமாகத் தோன்றுவது (जलमयं) பிரதிபலிக்கும் ஜலம் நிறைந்த (मरकतकरण्डं) மரகதபாண்டம் (कलाभि:) கிரணங்களாகிய (कर्प्पूरै:) பச்சைக் கர்ப்பூரத்தால் (निभिडितं) நிறைவு செய்யப்பட்டுள்ளது. (कलङ्क:) களங்கமாகத் தோன்றுவது (कस्तूरी) கஸ்தூரீ (अत:) ஆகையால் (प्रतिदिनं) தினந்தோரும் (त्वद्भोगेन) உனது உபயோகத்தால் (रिक्तकुहरम्) காலியாகும் அப்பாண்டத்தை (विधि) பிரம்மா (भूय: भूय:) மீண்டும் மீண்டும் (तवकृते) உனக்காக (नूनं) நிச்சயம் (निबिडयति) நிரப்பி வைக்கிறார் – என்றுதான் நான் கருதிகிறேன்.


पुरारन्ते-रन्त: पुरमसि तत-स्त्वचरणयो:
सपर्या-मर्यादा तरलकरणाना-मसुलभा /
तथा ह्येते नीता: शतमखमुखा: सिद्धिमतुलां
तव द्वारोपान्त: स्थितिभि-रणिमाद्याभि-रमरा: // [९५]

(त्वं) நீ (पुराराते) முப்புரம் எருத்த பரமசிவனுடைய (अन्त:पुरम् असि) அந்தப்புரத்தில் உள்ள பட்டாமகிஷியாக விளங்குகிறாய். (तत:) அதனால் (त्वत् चरणयो) உன்னுடைய பாகங்களில் (सपर्या मर्यादा) நெருங்கி பூஜை செய்யும் முறை (तरलकरणानां) அடங்காத சித்தம் உடையவர்களால் (असुलभा) அடையக் கூடியது அன்று. (तथा हि) அதனால் தான் (ऎते) இந்த (शतमखमुखा) இந்திரன் முதலான (अमरा) தேவர்கள் (तव) உன்னுடைய (द्वारोपान्त: स्थितिभि) வாயிற்புரத்தில் இருக்கும் (अणिमाद्याभि) அணிமா முதலிய தேவதைகளால் – தடை செய்யப்பட்டவர்கள் ஆயினும் பூஜை செய்ய விரும்பி வந்ததால் (अतुलाम् सिद्धिम्) அணிமா முதலிய நிகரற்ற சித்திகளை (नीता) அடையும்படி செய்விக்கப்பட்டார்கள்.

कलत्रं वैधात्रं कतिकति भजन्ते न कवय:
श्रियो देव्या: को वा न भवति पति: कैरपि धनै: /
महादेवं हित्वा तव सति सतीना-मचरमे
कुचभ्या-मासङ्ग: कुरवक-तरो-रप्यसुलभ: // [९६]

(सति) பதிவிரதைகளின் தெய்வமே ! (वैधात्रं) ப்ரம்மவினுடைய (कलत्रं) மனைவியை (कति कति) எத்தனையோ (कवय:) கவிகள் (न भजन्ते) நாடி ஆடையவில்லயா? (कैरपि धनै:) ஏதோ ஒரு வகையான செல்வத்தால் (को वा) எவனோ ஒருவன் (श्रियो देव्या: पति:) லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக (न भवति) ஆகிவிடவில்லயா (सतीनाम्) பதிவிரதைகளுக்குள் (अचरमे) முதன்மையானவளே ! (महादेवम्) மகாதேவனை (हित्वा) விட்டு (तव) உனது (कुचभ्या-मासङ्ग:) நகில்களுடைய ஸம்பந்தமோ (कुरवक-तरो अपि) மருதோன்றி மரத்திற்க்குக்கூட (असुलभ:) கிடைத்தற்க்கு அறிது.



गिरामाहु-र्देवीं द्रुहिणगृहिणी-मागमविदो
हरे: पत्नीं पद्मां हरसहचरी-मद्रितनयाम् /
तुरीया कापि त्वं दुरधिगम-निस्सीम-महिमा
महामाया विश्वं भ्रमयसि परब्रह्ममहिषि // [९७]

(परब्रह्ममहिषि) பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே ! (आगमविद:) வேதத்தை அறிந்தவர்கள் - (त्वाम् एव) உன்னையே - (द्रुहिणगृहिणीं) பிரம்மவின் பத்தினியான (गिराम् देवीम्) வாக்தேவதையாக (आहु:) கூறுகிறார்கள் (त्वाम् एव) உன்னையே (हरे) ஹரியினுடைய (पत्नीं) பத்தினியான (पद्मां) லக்ஷ்மியாகவும் (हरसहचरीम्) சிவனுடைய பத்தினியான (अद्रितनयाम्) பார்வதியாகவும் (आहु:) கூறுகிறார்கள். (त्वं) நீயே (तुरीया) இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாக (दुरधिगम-निस्सीम-महिमा) அடைதற்கு அரிதும் எல்லை இல்லாததுமான மகிம உடையவளாக - (महामाया) மகா மாயை எனப்பட்டவளாக (विश्वं) உலகு அனைத்தையும் (भ्रमयसि) ஆட்டி வைக்கிறாய்.

कदा काले मात: कथय कलितालक्तकरसं
पिबेयं विद्यार्थी तव चरण-निर्णेजनजलम् /
प्रकृत्या मूकानामपि च कविता०कारणतया
कदा धत्ते वाणीमुखकमल-ताम्बूल-रसताम् // [९८]

(मात:) தாயே ! (कलितालक्तकरसं) லாக்ஷாரஸப் பூச்சுடன் கலந்து வரும் (तव) உன்னுடைய (चरण-निर्णेजनजलम्) பாதப்பிரக்ஷாளன தீர்த்தத்தை (विद्यार्थी) பிரம்ம வித்தையை நாடும் நான் (कदा काले) எந்தக் காலத்தில் (पिबेयम्) பருகப்போகிறேன்? (कथय) கூறி அருளுங்கள். (प्रकृत्या) இயற்க்கையாகவே (मूकानाम् अपि) ஊமைகளுக்கும்கூட (कविता कारणतया) கவி பாடும் சக்தியை அளிக்குங் காரணத்தால் (वाणी मुख कमल ताम्बूल रसताम्) ஸரஸ்வதியின் வாயில் உள்ள தாம்பூல ரஸத்திற்க்கு ஒப்பான நிலையை (कदा) எப்போது (धत्ते) என் வாயில் சேர்ந்த அந்தப் பாத தீர்த்தம் – அடையப் போகிறது?



सरस्वत्या लक्ष्म्या विधि हरि सपत्नो विहरते
रते: पतिव्रत्यं शिथिलयति रम्येण वपुषा /
चिरं जीवन्नेव क्षपित-पशुपाश-व्यतिकर:
परानन्दाभिख्यं रसयति रसं त्वद्भजनवान् // [९९]

(त्वद्भजनवान्) உன்னைப் பூஜிப்பவன் (विधि हरि सपत्नो) பிரம்மாவும் விஷ்ணுவும் கூடப் பொறாமைப் படக் கூடியவனாக (सरस्वत्या) கல்வியுடனும் (लक्ष्म्या) செல்வத்துடனும் (विहरते) இன்பத்தை எய்துகுறான். (रम्येण वपुषा) மன்மதன் போன்ற உடல் அழகால் (रते:) ரதி தேவியின் (पातिव्रत्यम्) கற்ப்பையும் (शिथिलयति) கலங்கச் செய்கிறான். (क्षपित-पशुपाश-व्यतिकर:) பசுத்தன்மையும் வினைக்கயிற்றின் கட்டுகளும் நீங்கியவனாக - (परानन्दाभिख्यं) பேரானந்தம் எனப் பிரசித்தி பெற்ற (रसम्) இன்பரஸத்தை (चिरं जीवन्नेव) சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டு (रसयति) அநுபவிக்கிறான்.

प्रदीप ज्वालाभि-र्दिवसकर-नीराजनविधि:
सुधासूते-श्चन्द्रोपल-जललवै-रघ्यरचना /
स्वकीयैरम्भोभि: सलिल-निधि-सौहित्यकरणं
त्वदीयाभि-र्वाग्भि-स्तव जननि वाचां स्तुतिरियम् // [१००]

(वाचां) வாக்கிற்கு (जननि) பிறப்பிடமாகிய தாயே ! (प्रदीप ज्वालाभि:) கர்ப்பூரதீப ஜ்வாலையால் (र्दिवसकर-नीराजनविधि:) சூரியனுக்கு நீராஜனம் செய்தாற் போலும் (सुधा सूधे) அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு (श्चन्द्रोपल-जललवै) சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் (अर्ग्यरचना) அர்க்கியம் அளித்தாற்போலும் (स्वकीयैरम्भोभि:) சமுத்திரத்துக்கு – சொந்தமான ஜலத்தாலேயே (सलिल-निधि-सौहित्यकरणं) சமுத்திரத்திற்க்கு தர்ப்பணம் சேய்தாற் போலும் இருக்கிறது. (त्वदीयाभि:) உன்னுடையதேயான (वाग्भि:) வாக்குகளால் அமைந்த (इयम्) இந்த (तव) உனது (स्तुति:) ஸ்தோத்திரம்.

सौन्दयलहरि मुख्यस्तोत्रं संवार्तदायकम् /
भगवद्पाद सन्क्लुप्तं पठेन् मुक्तौ भवेन्नर: //
सौन्दर्यलहरि स्तोत्रं संपूर्णं

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

<< Home