Uma Sundaram

Sunday, April 22, 2007

Soundaryalahiri Script with Meaning Shlokas 81 - 90

गुरुत्वं विस्तारं क्षितिधरपति: पार्वति निजात्
नितम्बा-दाच्छिद्य त्वयि हरण रूपेण निदधे /
अतस्ते विस्तीर्णो गुरुरयमशेषां वसुमतीं
नितम्ब-प्राग्भार: स्थगयति लघुत्वं नयति च // [८१]

(पार्वति) பார்வதியே ! (क्षितिधरपति:) மலையரசன் (गुरुत्वं) கனத்தையும் (विस्तारम्) விஸ்தாரத்தையும் (निजात्) தன்னுடைய (नितम्बात्) அடிவாரத்தினின்றும் (आच्छिद्य) எடித்து (त्वयि) உன்னிடத்தில் (हरणरूपेण) சீராக (निदधे) கொடுத்துவிட்டார் போலும் (अत:) அதனால்தான் (गुरु:) பருத்தும் (विस्तीर्ण:) விசாலமாகவும் இருக்கிற (ते) உன்னுடைய (अयं) இந்த (नितम्ब-प्राग्भार:) நிதம்பத்தின் பின்புறம் (अशेषां वसुमतीं) பூமி முழுவதையும் (स्थगयति) மறைக்கிறது (लघुत्वं च) அதை லேசாகவும் (नयति) செய்து விடுகிறது.

करीन्द्राणां शुण्डान्-कनककदली-काण्डपटलीं
उभाभ्यामूरुभ्या-मुभयमपि निर्जित्य भवति /
सुवृत्ताभ्यां पत्यु: प्रणतिकठिनाभ्यां गिरिसुते
विधिज्ञे जानुभ्यां विबुध करिकुंभ द्वयमसि // [८२]

(भवति) பகவதி ! (गिरिसुते) பார்வதி ! (करीन्द्राणां) சிறந்த யானைகளின் (शुण्डान्) துதிக்கைகள் (कनककदली-काण्डपटलीं) பொன்வாழை மரங்கள் (उभयमपि) ஆகிய இவ்விரண்டையும் (उभाभ्यामूरुभ्याम्) இரண்டு தொடைகளால் (निर्जित्य) ஜயித்தும் (विधिज्ञे) சாஸ்திரத்தை அறிந்தவளே ! (पत्यु:) பதியாகிய பரமசிவனுக்கு (प्रणतिकठिनाभ्यां) நமஸ்காரம் செய்யும் பழக்கத்தால் கடினமாகவும் (सुवृत्ताभ्यां) நன்கு திரண்டு உருண்டும் இருக்கும் (जानुभ्याम्) முழங்கால் முட்டிகளால் (विबुध करिकुंभ द्वयं) இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்தின் இரண்டு கும்பங்களையும் (निर्जित्य) ஜயித்தும் (असि) இருக்கிறாய்.




पराजेतुं रुद्रं द्विगुणशरगर्भौ गिरिसुते
निषङ्गौ जङ्घे ते विषमविशिखो बाढ-मकृत /
यदग्रे दृस्यन्ते दशशरफला: पादयुगली
नखाग्रच्छन्मान: सुर मुकुट-शाणैक-निशिता: // [८३]

(गिरिसुते) பார்வதீ! (विषमविशिखो) பஞ்சபாணனாகிய மன்மதன் (रुद्रं) ருத்திரனை (पराजेतुम्) ஜயிப்பதற்க்கு (ते) உன்னுடைய (जङ्घे) முழந்தாள்களை (द्विगुणशरगर्भौ) இரு மடங்கு நிறைந்த (निषङ्गौ) அம்பறாத் தூணிகளாக (अकृत) செய்திருக்கிறான். (बाढं) ஆம். நிச்சியம் (यदग्रे) அவ்வம்பறாத் தூணிகளின் நுனியில் (पादयुगली) இரண்டு பாதங்கள் உடைய (नखाग्रच्छन्मान:) நகங்களின் நுனிகள் எனப் புனைபெயர் கொண்டவைகளும் (सुरमकुट) தேவர்களுடைய கிரீடங்களாகிய (शाणैक निशिता:) சாணைக் கற்களால் தீட்டப் பெற்றவையுமான (दशशरफला:) பத்து பாணங்களின் இரும்பு முனைகள்தான் (दृश्यन्ते) காணப்படுகின்றன.

श्रुतीनां मूर्धानो दधति तव यौ शेखरतया
ममाप्येतौ मात: शिरसि दयया देहि चरणौ /
ययओ: पाद्यं पाथ: पशुपति जटाजूट तटिनी
ययो-र्लाक्षा-लक्ष्मी-ररुण हरिचूडामणि रुचि: // [८४]

(मात:) தாயே ! (तव) உன்னுடைய (यौ) யந்த (चरणौ) பாதங்களை (श्रुतीनां मूर्धानो) வேதங்களின் தலைப் போன்ற உபநிஷத்கள் (शेखरतया) சிரோபூஷணங்களாக (दधति) தரிக்கின்றனவோ (येतौ) அந்த பாதங்கள் (मम) என்னுடைய (शिरसि अपि) தலையிலும் கூட (दयया) தயைக் கூர்ந்து (देहि) வைத்தருள்வாயாக (ययो:) அவற்றிற்கு (पाद्यम् पाथ:) பாத்யமாக அளிக்கப் பட்ட தீர்த்தம் (पशुपति) பரமசிவனுடைய (जटाजूट) சடையில் இருக்கும் (तटिनी) கங்கையாகிறது. (ययो:) அவற்றிற்கு (लाक्षा: लक्ष्मी:) பூசப் பட்ட லாக்ஷா ரஸத்தின் பொலிவு (अरुण हरिचूडामणि रुचि:) சிவப்பான காந்தியுடன் கூடினதும் விஷ்ணுவின் சிரசை அலங்கரிப்பதுமான மாணிக்கமோ என்று எண்ணும்படி இருக்கிறது.


नमो वाकं ब्रूमो नयन-रमणीयाय पदयो:
तवास्मै द्वन्द्वाय स्फुट-रुचि रसालक्तकवते /
असूयत्यत्यन्तं यदभिहननाय स्पृहयते
पशूना-मीशान: प्रमदवन-कङ्केलितरवे // [८५]

(नयन-रमणीयाय) கண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் (स्फुट-रुचि) பிரகாசம் மிக்கதாகவும் (रसालक्तकवते) உலராத செம்பஞ்சுக்குழம்புடன் கூடியதாகவும் உள்ள (तव पदयो:) உன்னுடைய பாதங்கள் (अस्मै द्वन्द्वाय) இவ்விரண்டிற்க்கும் (नमो वाकम्) நமஸ்கார வார்த்தையை (ब्रूम) சொல்லுகிறோம் (यदभिहननाय) அந்த பாதங்களால் உதைக்கப் படுவதை (स्पृहयते) விரும்புகிற (प्रमदवन) நந்தவனத்தில் உள்ள (कङ्केलितरवे) அசோக மரத்தினிடம் (पशूनाम् इशान:) பசுபதியானவர் (अत्यन्तम्) மிகவும் (असूयति) பொறாமைப் படுகிறார்.

मृषा कृत्वा गोत्रस्खलन-मथ वैलक्ष्यनमितं
ललाटे भर्तारं चरणकमले ताडयति ते /
चिरादन्त: शल्यं दहनकृत मुन्मूलितवता
तुलाकोटिक्वाणै: किलिकिलित मीशान रिपुणा // [८६]

(गोत्रस्खलनं) உன் பிறந்த வீட்டைப் பற்றிய ஏளனத்தை (मृषा) விளையாட்டுக்காக (कृत्वा) செய்துவிட்டு (अत:) பிறகு உன் ப்ரணய கோபத்தைக் கண்டு (वैलक्ष्य) இன்னது செய்வது என்று தெரியாமல் (नमितं) வணங்கின (भर्तारम्) பர்த்தாவின் (ललाटे) நெற்றியில் (ते) உன்னுடைய (चरणकमले) பாதகமலங்கள் (ताडयति) தட்டுப்படும்போது (दहनकृतं) நெற்றிக்கண் நெறுப்பால் எரிக்கப்பட்டு (चिरादन्त: शल्यं) நெடுநாளாக நெஞ்சில் தைத்து உறுத்திக் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை (उन्मूलितवता) அடியோடு தீர்த்துக் கொள்பவனும் (ईशान रिपुणा) சிவனுடைய பகைவனுமாகிய மன்மதனால் (तुलाकोटिक्वाणै:) உன் பாதச்சிலம்புகளின் ஒலிகளின் மூலம் (किलिकिलितम्) கிலிகிலி என்ற ஜயகோஷம் எழுப்பப்படுவதாயிற்று.



हिमानी हन्तव्यं हिमगिरिनिवासैक-चतुरौ
निशायां निद्राणं निशि-चरमभागे च विशदौ /
वरं लक्ष्मीपात्रं श्रिय-मतिसृहन्तो समयिनां
सरोजं त्वत्पादौ जननि जयत-श्चित्रमिह किम् // [८७]

(जननी) தாயே ! (हिमानी हन्तव्यं) தாமரையோ பனியில் கருகிப்போவது (हिमगिरिनिवासैक-चतुरौ) உனது திருவடித் தாமரைகளோ – பனிமலையில் இருப்பதில் தேற்ச்சி பெற்றவை; (निशायां निद्राणं) தாமரை இரவில் இதழ்களை மூடிக்கொண்டு உறங்குவது, (निशि-चरमभागे च विशदौ) உனது திருவடிகளோ இரவிலும் இரவு முடிந்த போதும் எப்போதும் பிரசன்னமாய் இருப்பவை. (वरं लक्ष्मीपात्रं) தாமரைத் தன்னிடம் லக்ஷ்மி வசிக்கும்படி இருப்பது. (श्रिय-मतिसृहन्तो समयिनां) உன் திருவடித்தாமரைகளோ வழிபடுபவர்க்களுக்கு லக்ஷ்மியை அளிப்பவை – ஆகையால் (सरोजं) தாமரையை (त्वत्पादौ) உனது பாத கமலங்கள் (जयत:) ஜயிக்கின்றன (इह:) இதில் (चित्रं) அதிசயம் (किम्) என்ன இருக்கிறது?


पदं ते कीर्तीनां प्रपदमपदं देवि विपदां
कथं नीतं सद्भि: कठिन-कमठी-कर्पर-तुलाम् /
कथं वा बाहुभ्या-मुपयमनकाले पुरभिदा
यदादाय न्यस्तं दृषदि दयमानेन मनसा // [८८]

(देवि) தேவியே! (ते) உன்னுடைய (प्रपदम्) பாதங்களின் முன்பாகம் (कीर्तीनाम्) நீ அடியார்களைக் காக்கின்றாய் என்ற கீர்த்திக்கு (पदम्) உறைவிடம் (विपदाम्) அடியார்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு (अपदम्) இடல் அளிக்காமல் இருப்பது – கருணையால் அங்ஙனம் மிகவும் மென்மையானதாக இருக்கையில் அதற்கு - (सद्भि:) ஸாதுக்களாகிய கவிகளால் (कठिन-कमठी-कर्पर-तुलाम्) கடினமான ஆமையோட்டின் உவமை (कथम्) எப்படி (नीतम्) கற்பிக்கப்பட்டதோ? (दयमानेन मनसा) தயை நிறைந்த மனமுடைய (पुरभिता) பரமசிவனால் (उपयमनकाले) விவாஹக்காலத்தில் (यत् बाहुभ्याम् आदाय) அப்பாதங்கள் கைகளால் எடுத்து (दृशदि) அம்மிக்கல்லின் மேல் (कथम् वा) எப்படித்தான் (न्यस्तम्) வைக்கப்பட்டனவோ?

नखै-र्नाकस्त्रीणां करकमल-संकोच-शशिभि:
तरूणां दिव्यानां हसत इव ते चण्डि चरणौ /
फलानि स्व:स्थेभ्य: किसलय-कराग्रेण ददतां
दरिद्रेभ्यो भद्रां श्रियमनिश-मह्नाय ददतौ // [८९]

(चण्डि) சும்ப நிசும்பர்களை ஸம்ஹாரம் செய்த பரதேவதையாகிய சண்டிகையே! (किसलय) துளிர்கள் ஆகிற (कराग्रेण) கை நுனிகளால் (स्व:स्थेभ्य:) ஸ்வர்க்க வாசிகளிக்கு (फलानि) விரும்பிய பலன்களை (ददतां) அளிக்கின்ற (दिव्यानाम्) தேவ லோகத்தில் உள்ள (तरूणाम्) கல்பகம் முதலிய விருக்ஷங்களை (दरिद्रेभ्य्श्च:) ஏழை எளியவர்களுக்கும் (भद्रां) பரம மங்களமான (श्रियं) செல்வத்தை (अनिशम्) எந்தச் சமயத்திலும் (अह्नाय) விரைவில் (ददतौ) அளிக்கின்ற (ते) உனது (चरणौ) பாதங்கள் (नखै) நகங்களால் (हसत: इव) பரிகசிப்பவைப்போல் இருக்கின்றன, எப்படிப்பட்ட நகங்களால் என்றால் (नाकस्त्रीणाम्) தேவஸ்த்ரீகளால் (करकमल) கைகளாகிற தாமரைகளை (संकोच) மூடிக்கொள்ளச் செய்யும் (शशिभि:) சந்திரர்களப் போன்ற (नखै) நகங்களால்.

ददाने दीनेभ्य: श्रियमनिश-माशानुसदृशीं
अमन्दं सौन्दर्यं प्रकर-मकरन्दं विकिरति /
तवास्मिन् मन्दार-स्तबक-सुभगे यातु चरणे
निमज्जन् मज्जीव: करणचरण: षट्चरणताम् // [९०]

(दीनेभ्य:) ஏழை எளியவர்களுக்கு (आशानुसदृशीं) அவரவர்கள் விருப்பத்திற்கு இணங்க (श्रियम्) செல்வத்தை (अनिशम्) எப்போதும் (ददाने) அளிப்பதும் (अमन्दं) குறைவின்றி (सौन्दर्यं प्रकर-मकरन्दं) அளவு கடந்ட அழகாகிய மகரந்தத்த (विकिरति) இறைப்பதும் (मन्दार:) கற்பகத்தின் (स्तभक) பூங்கொத்தைப் போல் (सुभके) மங்களவடிவாகியதும் ஆன (अस्मिन् तव चरणे) உன்னுடைய இப்பாத கமலங்களில் (निमज्जन्) புகுந்து உறைவதும் (करणचरण:) மனத்துடன் கூட இந்திரியங்கள் ஆகிற கால்களைக் கோண்டதுமான (षट्चरणताम्) ஆறுகால் வண்டாக இருக்கும் தன்மையை (मज्जीव) என்னுடைய ஜீவன் (यातु) அடையட்டும்

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

<< Home