Uma Sundaram

Sunday, April 22, 2007

Soundaryalahiri Script with Meaning Shlokas 61 - 70

असौ नासावंश-स्तुहिनगिरिवण्श-ध्वजपटि
त्वदीयो नेदीय: फलतु फल-मस्माकमुचितम् /
वहत्यन्तर्मुक्ता: शिशिरकर-निश्वास-गलितं
समृद्ध्या यत्तासां बहिरपि च मुक्तामणिधर: // [६१]

(तुहिनगिरिवण्श-ध्वजपटि) ஹிமவானுடைய குலமாகிய கொம்பில் பறக்கும் கொடிபோன்றவளே! (त्वदीय:) உன்னுடைய (असौ) இந்த (नासवंश) மூங்கில் தண்டு போன்ற மூக்கு (अस्माकम्) எங்களுக்கு (उचितम्) பொருத்தமானதும் (नेतीय:) விரைவில் கை கூடுவதுமான (फल) நற்பயனை (फलतु) அளிக்கட்டும் (य: ) அந்த மூக்காகிய மூங்கில் தண்டு (अन्त:) உள்ளே (मुक्ता) முத்துக்களை (वहति) வைத்துக் கொண்டு இருக்கிரது போலும் (तासाम् समृद्ध्या) அவ்வாறு முத்துக்கள் நிறைந்திருப்பதால்தான் (बहिरपि च) வெளியிலேயும் (शिशिरकर-निश्वास-गलितं) சந்திர நாடிபாயும் இடதுநாசியின் வழி வெளியே வரும் மூச்சுக் காற்றினால் கொண்டு வரப்பட்ட (मुक्तामणिधर:) சிறந்த முத்தை அணிந்துகொண்டிருக்கிறது போலும்.

प्रकृत्याऽऽरक्ताया-स्तव सुदति दन्दच्छदरुचे :
प्रवक्ष्ये सादृश्यं जनयतु फलं विद्रुमलता /
न बिंबं तद्बिंब-प्रतिफलन-रागा-दरुणितं
तुलामध्रारोढुं कथमिव विलज्जेत कलया // [६२]

(सुदति) அழகிய பற்க்களைக் கொண்டவளே! (प्रक्रृत्या) இயற்க்கையாகவே (आरक्ताया) சிவந்திருக்கிற (स्तव )உன்னுடைய (दन्दच्छदरुचे) உதடுகளின் அழகுக்கு (सादृश्यम्) உபமானம் (प्रवक्ष्ये) சொல்லுகிறேன் (विद्रुमलता) பவழக்கொடி (फलम्) பழத்தை (जनयतु) உண்டக்கட்டும். (அது ஒரு வேளை உபமானம் ஆகலாம். ஆனால் பவழக்கொடிக்கு பழம் இல்லை) (बिम्बम्) கோவைப்பழமோ என்றால் (तद्बिंब-प्रतिफलन-रागात्) தேவியின் உதடுகளைப்போல் இருக்க வேண்டும் என்று அச்சிவப்பை தன்னிடல் பிரதிபலிக்கச் சேய்து கொண்டதால் (अरुणितम्) சிவப்பாக இருப்பதால் (तुलाम ) சமத்துவத்தை (कलया ) சிறிதளவுகூட (अध्यारोढुं ) அடைய முயன்றாலும் (कथमिव) எப்படித்தான் (न विलज्जेत) வெட்க்கப் படாமல்


स्मितज्योत्स्नाजालं तव वदनचन्द्रस्य पिबतां
चकोराणा-मासी-दतिरसतया चञ्चु-जडिमा /
अतस्ते शीतांशो-रमृतलहरी माम्लरुचय:
पिबन्ती स्वच्छन्दं निशि निशि भृशं काञ्जि कधिया // [६३]

(तव) உன்னுடைய (वदन चन्द्रस्य) முகமாகிய சந்திரனின் (स्मितज्योत्स्ना जालम्) புன்சிரிப்பாகிய அமுதம் போன்ற நிலவுக்கற்றயை (पिबताम्) பறுகும் (चकोराणाम्) சகோரபக்ஷிகளுக்கு (अतिरसतया) அதன் அளவு கடந்த தித்திப்பால் (चन्चुजडिमा आसीत्) அலகு, உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டது. (अत:) அதனால் (ते) அவை (आम्लरुचय:) புளிப்பில் ஆசை கொண்டு (शीतांशो) குளிர்ந்த கிரணம் கொண்ட சந்திரனின் (अमृतलहरीम्) நிலவாகிய அமுதப் பெருக்கை (काञ्जि कधिया) புளித்த கஞ்சி என்று எண்ணி (स्वच्छन्दम्) வேண்டியவரை (निसि निसि) இரவு தோறும் (भृशम्) நிறைய (पिबन्ति) பருகுகின்றன.

अविश्रान्तं पत्युर्गुणगण कथाम्रेडनजपा
जपापुष्पच्छाया तव जननि जिह्वा जयति सा /
यदग्रासीनाया: स्फटिकदृष-दच्छच्छविमयि
सरस्वत्या मूर्ति: परिणमति माणिक्यवपुषा // [६४]

(जननी) தாயே! (तव) உன்னுடைய (सा) ப்ரசித்தமான (जिह्वा) நாக்கு (अविश्रान्तं) இடைவிடாமல் (पत्यु :) பதியாகிய பரமேசுவரனுடைய (गुणगण कथाम्रेडनजपा) பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபமாய்க் கொண்டு (जपापुष्पच्छाया) செம்பருத்திப் புஷ்பம்போல சிவந்து (जयति) சிறப்புடன் விளங்குகிறது (यदग्रासीनाया) அந்நாக்கின் நுனியில் இருக்கும் (सरस्वत्या) சரஸ்வதியினுடைய (स्फटिकदृषत्) படிகம் போன்ற (अच्च् ) தெளிவான (च्चविमयी) காந்தியுடன் கூடிய (मूर्ति:) வடிவம் (मणिक्य वपुषा) மாணிக்கம் போல சிவந்த வடிவமாக (परिणमति) மாறுதல் அடைகிறது.


रणे जित्वा दैत्या नपहृत-शिरस्त्रै: कवचिभि:
निवृत्तै-श्चण्डांश-त्रिपुरहर-निर्माल्य-विमुखै: /
विशाखेन्द्रोपेन्द्रै: शशिविशद-कर्पूरशकला
विलीयन्ते मातस्तव वदनताम्बूल-कबला: // [६५]

(मात:) தாயே! (रणे) போரில் (दैत्यान्) அசுரர்களை (जित्वा) வென்று (निवृत्तै:) திறும்பியவர்க்களும் (पहृत-शिरस्त्रै:) தலைப்பகையை நீக்கியவர்களும் (कवचिभि:) கவசம் பூண்டவர்களும் (चण्डांश) சண்டிகேசுவரனுடைய பாகமாகிய (त्रिपुरहर-निर्माल्य) பரமசிவ நிர்மால்யத்தில் (विमुखै:) நோக்கம் இல்லதவர்களுமான (विशाखेन्द्रोपेन्द्रै:) தேவஸேனாபதியான ஸுப்ரஹமணியர் தேவர்களின் அரசனான இந்திரன், உபேந்திரனாகிய விஷ்ணு ஆகியோரால் (शशि) சந்திரனைப் போல் (विशद) வெண்மையான (कर्पूरशकला) பச்சைக் கற்பூரத்தளுடன் கூடிய (तव) உன்னுடைய (वदनताम्बूल-कबला:) வாயில் மெல்லப் பட்ட தாம்பூலக் கவளங்கள் ((विलीयन्ते) விழுங்கப் படுகின்றன.

विपञ्च्या गायन्ती विविध-मपदानं पशुपते-
स्त्वयारब्धे वक्तुं चलितशिरसा साधुवचने /
तदीयै-र्माधुर्यै-रपलपित-तन्त्रीकलरवां
निजां वीणां वाणीं निचुलयति चोलेन निभृतम् // [६६]

(पशुपते) பசுபதியினுடைய (विविदम्) பல வகைப்பட்ட (अपदानम्) லீலையை (विपञ्च्या) வீணயில் (गायन्ती) பாடுகின்ற (वाणी) ஸரஸ்வதீதேவி (त्वया) உன்னால் (चलितशिरसा) தலையசைப்புடன் (सादुवचने) ஆமோதிக்கும் வார்த்தையானது (वक्तुम्) சொல்வதற்க்கு (आरब्धे) ஆரம்பிக்கப்பட்டபோது (तदीयै) அதனுடைய (माधुर्यै) இனிமையால் (अपलपित-तन्त्रीकलरवां) வீணைத்தந்திகளின் அழகிய ஒலி அவமதிப்புற்றதைக் கண்டு (निजाम्) தன்னுடைய (वीणाम्) வீணையை (चोलेन) உரையினால் (निभृतम्) வெளியில் தெரியாவண்ணம் ((निचुलयति) மூடிவிடுகிறாள்.



कराग्रेण स्पृष्टं तुहिनगिरिणा वत्सलतया
गिरिशेनो-दस्तं मुहुरधरपानाकुलतया /
करग्राह्यं शंभोर्मुखमुकुरवृन्तं गिरिसुते
कथंकरं ब्रूम-स्तव चुबुकमोपम्यरहितम् // [६७]

(गिरिसुते) மலையரசன் பெண்ணே! (तुहिनगिरिणा) இமவானால் (वत्सलतया) வாத்ஸல்யத்துடன் (कराग्रेण) நுனிக்கையால் (स्पृष्टं) தொடப்பட்டதும் (गिरिशेन :) பரமசிவனால் (अधरपानाकुलतया) அதரபானம் செய்யும் ஆவலுடன் (मुहु: ) அடிக்கடி (उदस्तम्) உயர்த்தப்பட்டதும் (शम्भो:) பரமசிவனுடைய (करग्राह्यं) கைய்யால் அங்ஙணம் தொடுதற்க்கு உரியதும் (ऒपम्यरहितम्) உவமையற்றதும் (मुखमुखुरवृन्दम्) முகமாகிய கண்ணாடிக்குப் பிடிபோன்றதும் ஆகிய (तव) உன்னுடைய (चुबुकम्) மோவாய் கட்டையை (कथम् कारम्) எப்பதித்தான் (ब्रूम:) வர்ணிப்போம்?

भुजाश्लेषान्नित्यं पुरदमयितु: कन्टकवती
तव ग्रीवा धत्ते मुखकमलनाल-श्रियमियम् /
स्वत: श्वेता काला गरु बहुल-जम्बालमलिना
मृणालीलालित्यं वहति यदधो हारलतिका // [६८]

(तव) உன்னுடைய (इयम्) இந்த (ग्रीवा) கழுத்து (पुरदमयितु:) முப்புரம் எரித்த பரமசிவனுடைய (भुझाश्लेषात्) புஜங்களின் தழுவுதலால் (नित्यम्) எப்போதும் (कण्टकवती) மயிர்க்கூச்சால் முள்களுடன் கூடியிருப்பதால் (मुख कमलनालश्रियम्) முகத்தாமரைக்குக் காம்பு போன்ற பொலிவை(धत्ते) அடைகிறது. (यत् अत:) அதற்க்கும் கீழுள்ள (हारलतिका) முத்துமாலை (स्वत:) இயற்க்கையில் (श्वेता) வெண்மையாயினும் (काला गरु) கறுப்பான அகிலுடன் கூடிய (बहुल-जम्बाल) சந்தனக்குழம்பின் மிகுதியால் (मलिना) சேற்றில் அழுக்கடைந்த (मृणाली) தாமரை கொடியின் (ललित्यम्) பொலிவை (वहति) கொண்டதாக இருக்கிறது.





गले रेखास्तिस्रो गति गमक गीतैक निपुणे
विवाह-व्यानद्ध-प्रगुणगुण-संख्या प्रतिभुव: /
विराजन्ते नानाविध-मधुर-रागाकर-भुवां
त्रयाणां ग्रामाणां स्थिति-नियम-सीमान इव ते // [६९]

(गति गमक गीतैक निपुणे) ஸங்கீத கதி, கமகம், கீதம், ஆகியவற்றில் ஒப்புயுவற்ற திறமை வாய்ந்தவளே ! (ते) உன்னுடைய (गले) கழுத்தில் உள்ள (तिस्र:) மூன்று (रेखा) பாக்கிய ரேகைகள் (विवाह) விவாஹக்காலத்தில் (व्यान्द्ध) நன்றாய் கட்டபட்ட (प्रगुण) பல நூல்கள் கொண்ட (गुणसंख्या) சரட்டின் எண்ணிக்கையை (प्रतिभुव:) ஞாபகப்ப்டுத்துவது போலும், (नानाविध) பலவிதமான (मधुर-रागाकर-भुवां) இனிய ராகங்களுக்குத் தோற்றுவாயாக உள்ள (त्रयाणां ग्रामाणां) ஷட்ஜம், மத்யமம், காந்தாரம் என்ற மூன்று தொகுதிகளுக்கும் (स्थिति-नियम-सीमान इव ते) இடத்தையும் எல்லையையும் பிரித்துக் காட்டுவது போலும் (विराजन्ते) விளங்குகின்றன.

मृणाली-मृद्वीनां तव भुजलतानां चतसृणां
चतुर्भि: सौन्द्रयं सरसिजभव: स्तौति वदनै: /
नखेभ्य: सन्त्रस्यन् प्रथम-मथना दन्तकरिपो:
चतुर्णां शीर्षाणां सम-मभयहस्तार्पण-धिया // [७०]

(मृणाली-मृद्वीनां) தாமரைத்தண்டுபோல் மெதுவாய்த் துவளும் (तव) உன்னுடைய (चतसृणां) நான்கு (भुजलतानाम्) கொடிபோன்ற கைகளின் (सौन्दर्यं) அழகை (सरसिजभव) தாமரையில் உதித்த பிரம்மா (प्रथम मथनात्) முதலில் தனது தலைகளில் ஒன்றை கிள்ளிவிட்ட (अन्तकरिपो:) காலகாலனான பரமசிவனுடைய (नखेभ्य:) நகங்களினின்று (सन्त्रस्यन्) பயந்து கொண்டு (समम्) ஸமகாலத்தில் (चतुर्णां) நான்கு (शीर्षाणां )தலைகளிக்கும் (अभयहस्तार्पण-धिया) நான்கு கைகளாலும் அபயம் அளிப்பாய் என்ற நோக்கத்துடன் (चतुर्भि: वदनै:) நான்கு முகங்களாலும் (स्तौति) துதிக்கிறார்.

Labels: , , , ,

1 Comments:

Post a Comment

<< Home