Uma Sundaram

Sunday, April 22, 2007

Soundaryalahiri Script with Meaning Shlokas 31 - 40

चतु:-षष्टया तन्त्रै: सकल मतिसन्धाय भुवनं
स्थितस्तत्त्त-सिद्धि प्रसव परतन्त्रै: पशुपति: /
पुनस्त्व-न्निर्बन्धा दखिल-पुरुषार्थैक घटना-
स्वतन्त्रं ते तन्त्रं क्षितितल मवातीतर-दिदम् // [३१]

(पशुपति:) பரமசிவன் (तस्तत्त्त-सिद्धि प्रसव) அவரவர் நாடும் அந்த அந்தச் சித்தியை மட்டும் அளிக்கும் (परतन्त्रै:) வேறு தந்திரங்களாகிய (चतु:-षष्टया तन्त्रै:) அறுபத்துனாலு வகைப்பட்ட தந்திர சாஸ்திரங்களால் (सकलम्) எல்லா (भुवनम्) உலகத்தையும் (अतिसन्धाय) நிரப்பிவிட்டு (स्थित: )வாளா இருக்கவே (पुन:) மெலும் (त्वन्निर्बन्धा) உன்னுடைய கட்டாயத்தின் பேரில் (अखिल-पुरुषार्थैक घटना) எல்லா விருப்பங்களயும், அறம் பொருள் இன்பம் வீடு என்ற எல்லா புருஷார்த்தங்களயும் ஒருங்கே கூட்டிவைக்க (स्वतन्त्रम्) வல்லதான (ते तन्त्रम्) உன்னுடைய தந்திரமாகிய (इदम्) இந்த ஸ்ரீவித்தையை (क्षितितलम्) பூவுலகில் (अवातीतरत्) அவதரிக்க செய்தார்.

शिव: शक्ति: काम: क्षिति-रथ रवि: शीतकिरण:
स्मरो हंस: शक्र-स्तदनु च परा-मार-हरय: /
अमी हृल्लेखाभि-स्तिसृभि-रवसानेषु घटिता
भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम् // [३२]

(जननि) தாயே ! (शिव:) சிவ பீஜாக்ஷரமான ‘க’ (शक्ति) சக்தி பீஜாக்க்ஷரமான ‘ஏ’ (काम:) மன்மத பீஜாக்ஷரமான ‘ஈ’ (क्षिति) பிருதிவி பீஜாக்ஷரமான ‘ல’ (अत:) அதன் பிறகு (रवि) சூரிய பீஜமான ‘ஹ’ (शीतकिरण: ) குளிர்ந்த கிரணங்களிடைய சந்திர பீஜமான ‘ஸ’ (स्मर: ) மன்மத பீஜமான ‘க’ (हंस) ஹம்ஸ மந்திரத்திலுள்ள ஆகாச பீஜமான ‘ஹ்’ (चक्र:) இந்திரனுடைய பீஜமான ‘ல’ (तदनु च) அதற்க்கு பிறகு (परा-मार-हरय:) பரா பீஜமாகிய ‘ஸ’ மன்மத பீஜமாகிய ‘க’ ஹரிபீஜமாகிய ‘ல’ (अमी ते वर्णा) உன்னுடைய இவக்ஷரங்கள் (तिसृभि) மூன்று (हृल्लेखाभि) புவனேசுவரி பீஜமான ஹ்ரீங்காரங்களுடன் (अवसानेषु) ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் (घटिता) சேர்க்கப் பட்டு (तव) உன்னுடைய (नामावयवताम्) மந்திரத்தின் அவயவங்களாக (भजन्ते) அமைகின்றன.

स्मरं योनिं लक्ष्मीं त्रितय-मिद-मादौ तव मनो
र्निधायैके नित्ये निरवधि-महाभोग-रसिका: /
भजन्ति त्वां चिन्तामणि-गुणनिबद्धाक्ष-वलया:
शिवाग्नौ जुह्वन्त: सुरभिघृत-धाराहुति-शतै // [३३]

(नित्ये) ஆதியந்தமற்ற பரதேவதயே ! (तव) உன்னுடைய (मनो) பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் ((आदौ) முதலில் (स्मरम्) காம பீஜமான ‘க்லீம்’ என்ற அக்ஷரம் (योनिम्) புவனேசுவரீ பீஜமான ‘ஹ்ரீம்’ என்ற அக்ஷரம் (लक्ष्मीम्) லக்ஷ்மீ பீஜமான ‘ஸ்ரீம்’ என்ற அக்ஷரம் (इदम् त्रितयम्) ஆகிய இம் மூன்றையும் (निधा) சேர்த்து (निरवधि- महाभोग-रसिका:) இடைவிடாத ஜபத்திலுள்ள ஆனந்தச் சுவையை அறிந்தவர்களாகிய ( एके) சிலர் (चिन्तामणि-गुणनिबद्धाक्ष-वलया:) தொடர்ந்து வரும் சிந்தனையை ஜபமாலையாகக் கொண்டு (शिवाग्नौ) சக்தி முக்கோணத்தில் உள்ள அக்கினியில் (सुरभिघृत-धाराहुति-शतै) காமதேனு அளித்த நெய் போன்ற ஆத்மானந்தத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஆஹுதிகளை (जुह्वन्त:) செய்பவர்களாக (त्वां) உன்னை (भजन्ति) ஆராதிக்கிறார்கள்.

शरीरं त्वं शंभो: शशि-मिहिर-वक्षोरुह-युगं
तवात्मानं मन्ये भगवति नवात्मान-मनघम् /
अत: शेष: शेषीत्यय-मुभय-साधारणतया
स्थित: संबन्धो वां समरस-परानन्द-परयो: // [३४]

(भगवति) பரதேவதையே ! (शशि-मिहिर-वक्षोरुह-युगं) சந்திர சூரியர்களை நகில்களாக உடைய (त्वं) நீ (शंभो) பரமசிவனுக்கு (शरीरम्) உடல் என்றும் (अनघम्) மாசற்ற (नवात्मानम्) ஒன்பது வ்யூஹ ஸ்வரூபியான சிவனை (तव) உன்னுடைய (आत्मानम्) உடல் என்றும் (मन्ये) மனக்கண்ணால் காண்கிறேன் (अत:) ஆகையால் (शेष: शेषी इति) உடைமை உடையவர் என்ற (अयम्) இந்த (संबन्ध: ) உறவு ( समरस-परानन्द-परयो:) ஸமரஸபட்ட ஆனந்த பைரவர், ஆனந்த பைரவி என்ற (वाम्) உங்களின் (उभय-साधारणतया) இருவருக்கும் ஸமமாக (स्थित:) நிலை பெற்றுள்ளது.

मनस्त्वं व्योम त्वं मरुदसि मरुत्सारथि-रसि
त्वमाप-स्त्वं भूमि-स्त्वयि परिणतायां न हि परम् /
त्वमेव स्वात्मानं परिण्मयितुं विश्व वपुषा
चिदानन्दाकारं शिवयुवति भावेन बिभृषे // [३५]

(मन:) ஆக்ஞாச்க்கரத்தில் மனமாக (त्वं) நீ விளங்குகிறாய் (व्योम:) விசுத்தி சக்கிரத்தில் ஆகாசமாகவும் (त्वं) நீயே விளங்குகிறாய் (मरुदसि) அநாஹதத்தில் வாயுவாக இருக்கிறாய் (मरुत्सारथिरसि) ஸ்வாதிஷ்டானத்தில் அக்கினியாக இருக்கிறாய். (आप:) ஜலத் தத்துவமும் (त्वं) நீயே (भूमि:) பிருதிவி தத்துவமும் (त्वं) நீயே (त्वयि परिणतायां) நீயே பிரபஞ்சமாகப் ப்ரிணமித்திருப்பதால் (परम्) உனக்கு வேறான பொருள் (न हि) இல்லவே இல்லை. (त्वमेव) நீயே (स्वात्मानम्) உனது ஸ்வரூபத்தை (विश्व वपुषा) பிரபஞ்ச வடிவாக (परिणमयितुम्) பரிணமிக்கச் செய்வதற்க்கு (शिवयुवति भावेन) பரமசிவனுடைய பத்னி என்ற பாவனையால் (चिदानन्दाकारं) ஆனந்த வடிவான சித் ரூபத்தை (बिभृषे) ஏற்றுகொள்கிறாய்.

तवाज्ञाचक्रस्थं तपन-शशि कोटि-द्युतिधरं
परं शंभु वन्दे परिमिलित-पार्श्वं परचिता /
यमाराध्यन् भक्त्या रवि शशि शुचीना-मविषये
निरालोके ऽलोके निवसति हि भालोक-भुवने // [३६]

(तव) உன்னுடைய (आज्ञाचक्रस्थं) ஆஜ்ஞா சக்கிரத்தில் இருப்பவரும் (तपन-शशि कोटि-द्युतिधरं) கோடி சூரிய சந்திரர்களின் பிரகாசத்தை உடையவரும் (परचिता) ஸகுண நிர்குண சக்திவடிவான உன்னால் (परिमिलित) இரு பக்கத்திலும் அணைக்கப் பெற்றவருமான (परं शंभु) பரம சிவனை (वन्दे) சேவிக்கின்றேன். (यं) அம்மாதிரி இருப்பவரை (भक्त्या) பக்தியுடன் (आरध्यन्) ஒருவன் ஆராதித்தால் (रवि शशि शुचीनाम्) சூரியன், சந்திரன் அக்கினி ஆகிய மூவுருடைய ஒளியாலும் (अविषये) விளங்கவைக்க முடியாததாகவும் (निरालोके) கண்ணுக்கு எட்டாததாகவும் (अलोके) கண்ணால் காணும் உலகத்தினின்று வேறுபட்டதாகவும் உள்ள (भालोक भुवने) பரஞ்ஜோதி வடிவமாம உனது ஸாயுஜ்ய பதவியில் (निवसति हि) வசிப்பான் என்று நிச்சியம்.

विशुद्धौ ते शुद्धस्फतिक विशदं व्योम-जनकं
शिवं सेवे देवीमपि शिवसमान-व्यवसिताम् /
ययो: कान्त्या यान्त्या: शशिकिरण्-सारूप्यसरणे
विधूतान्त-र्ध्वान्ता विलसति चकोरीव जगती // [३७]

(ते) உன்னுடைய (विशुद्धौ) விசுத்தி சக்கிரத்தில் (शुद्धस्फतिक विशदं) தெளிவான பளிங்கு போன்ற வடிவினரும் (व्योम जनकं) ஆகாச தத்துவத்தை தோற்றுவிப்பவரும் ஆகிய (शिवम्) சிவனையும் (शिवसमान-व्यवसिताम्) சிவனுடைய ஸங்கல்பத்திற்க்கு ஒத்த ஸங்கல்பம் உடையவளாகிய (देवीमपि) தேவியாகிய உன்னையும் (सेवे) சேவிக்கிறேன். (ययो:) எவர்களுடைய (शशिकिरण्-सारूप्यसरणे) வெண்ணிலாவைப் போல் (यान्त्या) வெளிவரும் (कान्त्या) ஒளியினால் (जगती) உலகம் முழுவதும் (विधूतान्त-र्ध्वान्ता) அஜ்ஞானமாகிய அக இருள் ஒழியப் பெற்றதாய் (चकोरीव) நிலவில் களிக்கும் சகோரப் பக்ஷிபோல் (विलसति) விளங்குகிரதோ – அப்படிப் பட்ட உங்களை ஸேவிக்கிறேன்.

समुन्मीलत् संवित्कमल-मकरन्दैक-रसिकं
भजे हंसद्वन्द्वं किमपि महतां मानसचरं /
यदालापा-दष्टादश-गुणित-विद्यापरिणति:
यदादत्ते दोषाद् गुण-मखिल-मद्भ्य: पय इव // [३८]

(समुन्मीलत् संवित्कमल-मकरन्दैक-रसिकं) நன்றாக மலர்ந்த ஞானத்தாமரையின் ஆனந்தமாகிய மகரந்தம் ஒன்றையே விரும்பி அநுபவிப்பவைகளும் (महताम्) மகான்களுடைய (मानसचरम्) மனதாகிற மானஸ ஸாரஸில் நீந்துபவைகளும் (किमपि) இப்படி பட்டவை என்று வர்ணிக்க முடியாதவைகளுமான (हंसद्वन्द्वं) இரண்டு ஹம்ஸங்களை (भजे) பூஜிக்கிறென். (यदालापा) அவைகளுடைய இன்பப்பேச்சிலிருந்தே (दष्टादश-गुणित-विद्यापरिणति:) பதினெட்டெனக் கணக்கிடப்பட்ட வித்தைகள் பரிணமிக்கின்றன. (यत्) அவை (दोषात्) குற்றாத்திலிருந்து (अखिलम् गुणम् ) குணமனைத்தையும் (अद्भ्य) நீரிலிருந்து (पय इव) பாலைப் போல (आदत्ते) பிரிக்கின்றன.

तव स्वाधिष्ठाने हुतवह-मधिष्ठाय निरतं
तमीडे संवर्तं जननि महतीं तां च समयाम् /
यदालोके लोकान् दहति महसि क्रोध-कलिते
दयार्द्रा या दृष्टि: शिशिर-मुपचारं रचयति // [३९]

(जननी) தாயே ! (तव) உன்னுடைய (स्वाधिष्ठाने) ஸ்வாதிஷ்டான சக்கிரத்தில் (हुतवहम्) அக்கினிதத்துவத்தை (अधिष्ठाय) சிந்தித்து – அதில் (निरतम्) இடைவிடாது பிரகாசிக்கும் (तम् संवर्त्तं) காலாக்கினி ரூபரான அந்த ருத்திரனையும் (ताम् महतीम्) மகிமை வாய்ந்த அந்த (समयां च) ஸமயா அல்லது சந்திர கலா சக்தி என்னும் உன்னையும் (ईडे) போற்றுகின்றேன். (यदालोके) ருத்திரருடைய எந்தப் பார்வையான (महसि) அக்கினி (क्रोधकलिते) கோபத்தால் வளர்ந்து (लोकान् ) உலகங்களை (दहति) எறிக்கின்றதோ அப்போது (या दायाद्रा दृष्टि:) கருணையால் நனைந்த உன்னுடைய பார்வை எதுவோ அது (शिशिरम् उपचारम्) குளிர்ச்சியான உபசாரத்தை (रचयति) செய்கிறது.

तटित्वन्तं शक्त्या तिमिर-परिपन्थि-स्फुरणया
स्फुर-न्ना नरत्नाभरण-परिणद्धेन्द्र-धनुषम् /
तव श्यामं मेघं कमपि मणिपूरैक-शरणं
निषेवे वर्षन्तं-हरमिहिर-तप्तं त्रिभुवनम् // [४०]

(तव) உன்னுடைய (मणिपूरैक-शरणं) மணிபூரகசக்கிரத்தை முக்கியமாக உறைவிடமாக கொண்டதும் (तिमिर-परिपन्थि-स्फुरणया) இருட்டுக்கு சத்துருவைப் போல் பிரகாசிக்கும் (शक्त्या) பராசக்தியாகிற (तटित्वन्तं) மின்னல்கொடியுடன் கூடியதும் (स्फुर-न्ना नरत्नाभरण-परिणद्धेन्द्र-धनुषम्) ஜ்வலிக்கும் நானாவிதமான ரத்தின ஆபரணங்களாகிய இந்திரவில்லுடன் கூடியதும் (श्यामं) கறுத்ததும் (हरमिहिर-तप्तं) ருத்ரனாகிய பிரளயகால சூரியனால் எரிக்கப்பட்ட (त्रिभुवनं) மூவுலகையும் (वर्षन्तं) மழை பொழிந்து குளிரச் செய்வதுமாகிய (कमपि मेघम्) அதிசயமான மேகம் போன்ற உனது ஸதாசிவ தத்துவத்தை (निषेवे) சேவிக்கிறேன்.

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

<< Home