Uma Sundaram

Sunday, April 22, 2007

Soundaryalahiri Script with Meaning Shlokas 1 - 10

//आनन्दलहरी //

भुमौस्खलित पादानाम् भूमिरेवा वलम्बनम् /
त्वयी जाता पराधानाम् त्वमेव शरणम् शिवे //

शिव: शक्त्या युक्तो यदि भवति शक्त : प्रभवितुं
न चेदेवं देवो न खलु कुशल: स्पन्दितुमपि/
अतस्त्वाम् आराध्यां हरि-हर-विरिन्चादिभि रपि
प्रणन्तुं स्तोतुं वा कथ-मक्र्त पुण्य: प्रभवति// [१]

(शिव:) மங்கள மூர்த்தியான (देव:) மஹாதெவன் (शक्त्या) பராசக்தியாகிய உன்னுடன் (युक्त:) கூடியவராக (यदि भवति) இருந்தால் மட்டும் (प्रभवितुं) பிரபஞ்சத்தை ஆக்குவதற்கு (शक्त :) திறமையுடயவர் ஆவார். (एवं) அவ்வறு (न चेत्) கூடியில்லாவிட்டால் (स्पन्दितुमपि) அசைவதற்க்குக்கூட (कुशल:) திறமை உடையவராக (न खलु) ஆவதில்லையன்றொ? (अत:) ஆகையால் (हरि-हर-विरिन्चादिभि रपि) விஷ்ணூ, பிரம்மா, முதலியவர்களாலும் (आराध्यां) பூஜித்தற்குரிய (त्वाम्) உன்னை (अकृत पुण्य:) புண்ணியம் செய்யாதவன் (प्रणन्तुं) வணங்குவதற்கொ (स्तोतुं वा) அல்லது துதிப்பதற்கொ (कथं) எஙஙனம் (प्रभवति) தகுதியுடையவனாவான்?

तनीयांसुं पांसुं तव चरण पङ्केरुह-भवं
विरिंचि: संचिन्वन् विरचयति लोका-नविकलम् /
वहत्येनं शौरि: कथमपि सहस्रेण शिरसां
हर: संक्षुद् यैनं भजति भसितोधूलन-विधिम्// [२]

௨. பாததூளி மகிமை
(विरिंचि:) பிரம்மா (तव) உன்னுடைய (चरण पङ्केरुह) திருவடித் தாமரைகளிலுள்ள (तनीयांसुं) மிக நுட்பமான (पांसुं) தூளை (संचिन्वन्) ஸம்பாதித்து (लोकान्) உலகங்களை (अविकलम्) முட்டின்றி (विरचयति) சிருஷ்டிக்கிறார். (शौरि:) ஆதிசெஷன் (शिरसां सहस्रेण) ஆயிரம் தலைகளால் ( (एनं) இவ்வுலக வடிவான பாத தூளியை (कथमपि) எப்படியொ (वहति) தாங்குகிறார் (हर:) ருத்திரன் ( (एनं) இதை (संक्षुत्य्) நன்றாக பொடியாக்கி (भसितोधूलन-विधिम्) விபூதி பூசிக் கொள்ளும் முறையை (भजति) அனுஷ்டிக்கிறார்.

अविद्याना-मन्त स्तिमिर-मिहिर द्वीपनगरी
जडानां चैतन्य-स्तबक-मकरन्द श्रुतिझरी /
दरिद्राणां चिन्तमणिगुणनिका जन्मजलधौ
निमग्नानां दंष्ट्रा मुररिपु-वराहस्य भवति// [३]

௩. பாத தூளி முக்தியளிப்பது (சர்வ வித்யா ப்ராப்தி)

உன்னுடைய பாததூளி – (अविद्यानाम्) அவித்தை குடிகொண்ட உள்ளத்தினர்க்கு (अन्तस्तिमिर-मिहिर-द्वीप-नगरी) அகத்திருளைப் பொக்கும் சூரியனுடைய உதயத்தீவின் நகரம் பொலும் (जडानाम्) அவிவெகிகளுக்கு (चैतन्य-स्तबक-मकरन्द श्रुतिझरी) ஆத்ம ஞானமாகிய கற்பகவிருக்ஷத்தின் பூங்கொத்திலிருந்து பரவிச் செல்லும் மகரந்தம் பொலும் (दरिद्राणाम्) எழைகளுக்கு (चिन्तामणि-गुणनिका) நினைத்ததை அளிக்ககூடிய சிந்தாமணிக் குவியலாயும் (जन्म जलधौ) பிறவிக்கடலில் (निमग्ग्नानाम्) மூழ்கியவர்களுக்கு (मुररिपुवराहस्य) ஆதி வராகமாய் அவதரித்து பூதெவியை தூக்கிய முராரியென் (दंष्ट्रा) கொறைப்பற்க்கள் போலும் (भवति) விளங்குகிறது.

त्वदन्य: पाणिभया-मभयवरदो दैवतगण:
त्वमेका नैवासि प्रकटित-वरभीत्यभिनया /
भयात् त्रातुं दातुं फलमपि च वांछासमधिकं
शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ // [४]

௪. பாதகமலங்களின் நிகரற்ற சக்தி (சகல பய நிவிருத்தி, ரொக நிவிருத்தி)

(लोकानाम् शरण्ये) உலகத்திற்க்கு புகலிடமெ (त्वदन्य) உனக்கு வேறான (दैवतगण:) தெவக்கூட்டங்கள் (पाणिभ्याम्) கைகளால்(अभयवरद:) அபயத்தையும் வரத்தையும் அளிப்பதாக காட்டுகிறவர்கள். (त्वमेका) நீ ஒருத்தி மட்டும் (प्रकटित-वरभीत्यभिनया) அபிநயத்தால் வரத்தையும் அபயத்தையும் பிரகடனம் செய்பவளாக (न एव असि) இருப்பதே இல்லை. (हि) ஏனென்றால் (भयात्) பயத்திலிருந்து (त्रातुम्) காப்பாற்றவும் (वांछासमधिकं) வேண்டியதற்க்கு அதிகமாகவே (फलम्) பலனை (दातुम् अपि च) அளிப்பதற்க்குங்கூட (तव) உன்னுடைய (चरणावेव) திருவடிகளே (निपुणौ हि) திறமை உடையவைகள் அன்றொ?

हरिस्त्वामारध्य प्रणत-जन-सौभाग्य-जननीं
पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभ मनयत् /
स्मरोऽपि त्वां नत्वा रतिनयन-लेह्येन वपुषा
मुनीनामप्यन्त: प्रभवति हि मोहाय महताम् // [५]

தேவி பூஜையின் மகிமை
(प्रणत-जन-सौभाग्य-जननीं) வணங்கும் ஜனங்களுக்கு ஸகல ஸௌபக்கியத்தயும் தோற்றுவிக்கும் (त्वां) உன்னை (हरि:) விஷ்ணு (आराध्य) பூஜித்து (पुरा) முன்னொரு சமயம் (नारी भूत्वा) பெண் வடிவு கொண்டு (पोररिपुम् अपि) முப்புறம் எரித்த பரம சிவனையும் கூட (क्षोभम्) மனம் சலிக்கும்படி (अनयत्) கவர்ந்தார். (स्मर: अपि) மன்மதனும் (त्वाम्) உன்னை (नत्वा) வணங்கி (रतिनयन-लेह्येन वपुषा) ரதிதேவி கண்கொண்டு பருகும் அமுதம் போன்ற வடிவங்கொண்டு (महताम्) மஹான்களான (मुनीनाम् अपि) முனிவர்களுக்கும் கூட ((अन्त:) அந்தரங்கத்தில் (मोहाय) மதிமயக்கம் உண்டாகும்படி (प्रभवति हि) சக்தியுள்ளவன் ஆகிறான் என்பது நிச்சியம்


धनु: पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखा:
वसन्त: सामन्तो मलयमरु-दायोधन-रथ: /
तथाप्येक: सर्वं हिमगिरिसुते कामपि कृपां
अपांगात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते // [६]

(हिमगिरिसुते) பனிமலயரசன் பெண்ணெ ! மன்மதனுடைய (धनु:) வில் (पौष्पं ) மலர்களானது (मौर्वी ) நாண்கயிறு (मधुकरमयी) தேனிகளாலானது (विशिखा:) பாணங்கள் (पञ्च ) ஐந்தே – அவையும் பூக்கள் (सामन्त:) மந்திரி (वसन्त:) வசந்த ருது (आयोधनरथ:) பொர் செய்ய ஏறி வரும் தேர், (मलयमरुत्) மலயத்திலிருந்து வீசும் தென்றல் காற்று (तथापि) அப்பிடி இருந்தும் (अनङ्ग) உடல்லில்லாத மன்மதன் (एक:) ஒருவனாகவே (ते) உன்னுடைய (अपाङ्गात्) கடைக்கண் பார்வையால் (कामपि कृपां) ஏதோ ஒரு கிருபையை (लब्ध्वा)அடைந்து (इदम्) இந்த (जगत्) உல்கம் (सर्वम्) அனைத்தயும் (विजयते) ஜயிக்கிறான்.

क्वणत्कांची-दामा करिकलभ कुंभ-स्तन-नता
परिक्षीणा मध्ये परिणत शरच्चन्द्र-वदना /
धनुर्बाणान् पाशं सृ॒णिमपि दधाना करतलै
पुरस्ता दास्तां न: पुरमथितु राहो-पुरुषिका // [७]

(क्वणत्) சலங்கைகள் கிலு கிலுக்கின்ற் (कांचीदामा) தங்க ஒட்டியாணம் பூண்டவளும் (करिकलभ कुंभ-स्तन-नता) யானையின் மஸ்தகம் போன்ற நகில்களால் சற்று வணங்கிய வடிவுடையவளும் (मध्ये) இடையில் (परिक्षीणा) மிக மெலிந்தவளும் (परिणत शरच्चन्द्र-वदना) சரத்கலத்துப் பூர்ணசந்திரன் போன்ற முகம் படைத்தவளும் (करतलै) கைகளால் (धनुर्बाणान् पाशं सृ॒णिमपि) கரும்புவில் புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை (दधाना) தரிப்பவளும் (पुरमथितु) முப்புரத்தை அழித்த பரமசிவனுடைய (आहो पुरुषिका) ஆச்சரியமான அகம் பாவ வடிவினளுமான பராசக்தி (न:) எங்களுக்கு (पुरस्ताद्) எதிரில் (आस्तां) எழுந்தருள்ட்டும்.

सुधासिन्धोर्मध्ये सुरविटपि-वाटी-परिवृते
मणिद्वीपे नीपोपवनवति चिन्तामणि गृहे /
शिवकारे मञ्चे परमशिव-पर्यक्ङ् निलयां
भजन्ति त्वां धन्या: कतिचन चिदानन्द-लहरीम् // [८]

(सुधासिन्धो:) அமிர்த கடலின் (मध्ये) நடுவில் (सुरविटपि-वाटी-परिवृते) கல்பகவ்ருக்ஷத்தோப்புகளால் சூழப்பட்ட (मणिद्वीपे) ரத்தினதீவில் (नीपोपवनवति) கதம்ப வனமத்துடன் கூடிய (चिन्तामणि गृहे) சிந்தாமணிக் க்ருஹத்தில் (शिवकारे मञ्चे) பரம மங்கள வடிவமான சிம்மாஸனத்தில் (परमशिव-पर्यक्ङ् निलयां) பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கும் (चिदानन्द-लहरीम्) ஞானானந்தக்கடலின் அலைபோன்ற (त्वाम्) உன்னை (धन्या:) புண்ணியவான்களான (कतिचन) சிலரெ (भजन्ति) வழிபடுகிறார்கள்.
महीं मूलाधारे कमपि मणिपूरे हुतवहं
स्थितं स्वधिष्टाने हृदि मरुत-मकाश-मुपरि /
मनोऽपि भ्रूमध्ये सकलमपि भित्वा कुलपथं
सहस्रारे पद्मे सह रहसि पत्या विहरसे // [९]

(मूलाधारे) மூலாதாரத்தில் (महीम्) பிருதிவீ தத்துவத்தையும் (मणिपूरे) மணிபூரத்தில் (कमपि)ஜலதத்துவத்தையும் (स्वधिष्टाने) ஸ்வாதிஷ்டானத்தில் (स्थितं) இருக்கும் (हुतवहम्) அக்னி தத்துவத்தையும் (हृदि) இருதயத்தில் அனாஹதத்தில் (मरुतम्) வாயு தத்துவத்தையும் (उपरि) அதற்க்கு மேல் விசுத்தியுல் (आकाशम्) ஆகாசதத்துவத்தையும் (भ्रूमध्ये) புருவ நடுவில் ஆக்ஞையில் (मनोऽपि) மனஸ் தத்துவத்தையும் (सकलमपि कुलपथं) இவ்வாறாக ஸூஷும்னா மார்க்கத்திலுள்ள எல்லாச் சக்கரங்களையும் (भित्वा) ஊட்டுருவிச் சென்று (सहस्रारे पद्मे) ஆயிரம் இதழ் கொண்ட கமலத்தில் (रहसि) ரகசியமான இடத்தில் (पत्या सह) உனது பதியாகிய ஸதாசிவனுடன் (विहरसे) கூடி மகிழ்கிறாய்.

सुधाधारासारै-श्चरणयुगलान्त-र्विगलितै:
प्रपंचं सिन्ञ्न्ती पुनरपि रसाम्नाय-महस:/
अवाप्य स्वां भूमिं भुजगनिभ-मध्युष्ट-वलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि // [१०]

(श्चरणयुगलान्त-र्विगलितै:) திருவடிகள் இரண்டின் இடையிலிருந்து பெருகும் (सुधाधारासारै) அமிருத தாரையின் பிரவாகத்தால் (प्रपंचं) ஐம் பூதங்களால் ஆன உட்லிலுள்ள நாடிகள் எல்லவற்றையும் (सिन्ञ्न्ती) நனைப்பவளாய் (रसाम्नाय-महस:) அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திர மண்டலத்தில் இருந்து (स्वां) உனது (भूमिं) இயற்க்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தை (पुनरपि) மறுபடியும் (अवाप्य) அடைந்து (भुजगनिभम्) பாம்பை போல் (अध्युष्ट-वलयं) குண்டல வடிவாக (स्वं) உன்னுடய (आत्मानम्) உருவத்தை (कृत्वा) செய்து கொண்டு (कुहरिणि) சிறு துவாரம் உடைய (कुलकुण्डे) மூலாதார குண்டத்தில் (स्वपिषि) உறங்குகிறாய்.

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

<< Home